வெளியானது லாக்கப் படத்தின் ட்ரைலர்….!

Must read


கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் மேல் ஆகின்றன.
திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.
இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
தற்போது ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டேனி’ மற்றும் ‘காக்டெய்ல்’ ஆகிய படங்கள் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக ‘லாக்கப்’ படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
‘லாக்கப்’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஜீ5 ஓடிடி தளமே கைப்பற்றியுள்ளது. எப்போது வெளியீடு என்ற தேதி இன்னும் உறுதியாகவில்லை.

வைபவ் ஹீரோவாக நடித்துள்ள லாக்கப் படத்திலும் வாணி போஜன் ஹீரோயினாக நடித்துள்ளார்.நடிகர் நிதின் சத்யா இந்த படத்தை தயாரிக்கிறார்.SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.வெங்கட் பிரபு,ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

More articles

Latest article