சேலம்:
மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு டிரான்ஸ்பர் கிடையாது என செய்தி வெளியாகி உள்ளது. இதன் காரணமாக  போலீசார் சோர்ந்துபோய் உள்ளனர்.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்து உள்ளது. தேர்தல் முடியும் வரை,  போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
தேர்தல் முடிந்ததும், எஸ்.பி.,க்கள், மாநகர கமிஷனர்கள், டி.ஐ.ஜி.,க்களின் பணி மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை காவல்துறையில் போலீஸ், அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்களும் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.
பிற சரகங்களில் பணிமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள், புதிய பணியிடங்களில் இணைந்த நிலையில், சேலம் சரகத்தில் மட்டும் பணி மாற்றம் செய்யப்பட்ட, 33 இன்ஸ்பெக்டர்களின் பணிமாற்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னை நீங்கலாக, வேலூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களுக்கு இடையிலான இன்ஸ்பெக்டர் களின் பணி மாற்றத்தை உள்ளாட்சி தேர்தல் வரை, ஒத்திவைக்க உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை இன்ஸ்பெக்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  மூன்று மாதங்களில், பணிமாற்றம் கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பணி மாற்றம் தள்ளிப்போய் இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பணிமாற்றப்பட்ட பெரும்பாலான போலீசார் குடும்பத்தை பிரிந்து வாழ்வதால், மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது.