சென்னை:
திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எல்லோரும் யோசித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் கட்டிவிட்டேன் என்று கூறினார்.
2sasi
மேலும், பொய் வழக்குகள் போடுவது அதிமுகவிற்கு புதிதல்ல. என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள்  அனைத்தும் பொய் வழக்குகள்தான்.  அதற்கு நான் பயப்படவில்லை.
சின்னச் சின்ன பெண்களை கூட்டி வந்து  புகார் கொடுக்க வைக்கின்றனர். அவர்களை பார்க்கும் போது பாவமாக உள்ளது. இவை அனைத்தும்  பொய் புகார்கள் என அனைவருக்கும் தெரியும்.
ஒரு கட்சியின் தலைவர் இதுபோன்று நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு எதிராக அவர்கள் என்ன செய்தாலும் நான் நாடாளுமன்றத்தில் பதிவு செய்வேன்.
நான் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவள். எனது கணவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர்கள் எத்தனை வழக்கு போட்டாலும் சந்திப்பேன்.
என்னை அசிங்கப்படுத்துவது என் சமுதாயத்தை அசிங்கப்படுத்துவதாகும். எனக்கு செய்யும் துரோகம், என் சமுதாயத்திற்கு செய்யும் துரோகம் அல்லவா? நான்  பயப்படும் சமுதாயத்திலிருந்து எம்.பி.யாக வரவில்லை என்றார்.
(சசிகலா எம்.பி. நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
அதுவும் ஒரு பெண் முதலமைச்சராக இருந்து கொண்டு இதுபோன்று செய்வது நியாயமா? நான் இந்த விவகாரத்தை விடப்போவதில்லை.
எனக்கு எது நடந்தாலும், அதற்கு அதிமுக தான் பொறுப்பு.
Jayalalitha
நான் வெளியே சொல்லிவிட்டேன். பலர் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். அதிமுகவில் அடிப்பது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று நடப்பது வழக்கம் தான்.
பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான் பிரச்னையாக இருந்தது. தற்போது நான் கட்டிவிட்டேன். இதனால் அதிமுகவில் பலர் சந்தோஷமாக உள்ளனர்.
ஒரு எம்பிக்கே இந்த நிலைமையென்றால் நமக்கு எந்த நிலைமையோ என்று பயந்து தான் வெளியே சொல்ல முடியாமல் உள்ளனர். என்னை கட்சியை விட்டு நீக்கியதால் அதிமுகவிற்கு தான் நஷ்டம். எனக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று கூறினார்.
மேலும்,  திரும்ப திரும்ப இதுபோன்று குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்றால், தமிழக அரசியலையே புரட்டிப் போடக்கூடிய அளவிற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கும் தெரியும்.
இதுபோன்று அதிமுக தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வந்தால், அதிமுகவின் ஊழல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் வெளிக்கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.