சென்னை:
சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.  முதற்கட்ட விசாரணையில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது.

சேலத்திலிருந்து சென்னை வரும்போது, ஓடும் ரெயிலின் கூரையில் ஓட்டை போட்டு ரூ.6 கோடியை கொள்ளையடித்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் ரெயில்வே போலீசார் திணறி வந்தனர். இந்த வழக்கை நேற்றிரவு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார்.
தனிப்படை யின் முதற்கட்ட விசாரணையில் ரெயில்வே ஊழியர்கள் துணையுடன் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
ரெயில் மேற்கூரையில் துளையிட்டு, வடமாநில கொள்ளை யர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது.