சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை (பகல் 12 மணி) வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. சில பகுதிகளுக்கு தேர்தல்முடிவுகளும் அறிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் 27 மற்றும் 30தேதிகளில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் நடைபெற்ற  27 மாவட்டங்களில் உள்ள 315 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டுமே கட்சி அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது.

ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் நடந்தது.

மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தலில் அ.தி.மு.க. 435 இடங்களிலும் தி.மு.க. 416 இடங்களிலும் போட்டியிட்டன.

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு அ.தி.மு.க. 3,842 இடங்களிலும், தி.மு.க., 4,139 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.

மொத்த உள்ளாட்சிகளில் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

 மீதமுள்ள பதவிகளை கைப்பற்ற கட்சி வேட்பாளர்கள் சுயேச்சைகள் உள்பட 2.31 லட்சம் பேர் களத்தில் உள்ளனர்.:

 பகல் 12 மணி வரை முன்னணி நிலவரங்கள்:

நண்பகல் 12 மணிநிலவரப்படி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக 221 இடங்களிலும்,  அதிமுக 47 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

மாவட்ட கவுன்சில் பதவிக்கான தேர்தலில் திமுக 90 இடங்களிலும், அதிமுக 39 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது இடத்தை சிபிஎம்மும், 3வது இடத்தை பாரதிய ஜனதா வேட்பாளரும் பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் – மதுக்கூர் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வெற்றி

ரெட்டியார்சத்திரம் 1வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் வெற்றி

வத்திராயிருப்பு 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வெற்றி

10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்-அதிமுக வேட்பாளர் பஞ்சவர்ணம் வெற்றி

சிவகங்கை-மானாமதுரை 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வெற்றி

திருச்செந்தூர் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் வாசுகி வெற்றி

ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி

ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுவிதா வெற்றி

தஞ்சாவூர் ஒன்றிய கவுன்சிலர் 2வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி

மதுரை – சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜென்சிராணி வெற்றி

எரிச்சநத்தம் ஊராட்சி – முத்துப்பாண்டி வெற்றி

விருதுநகர் – எரிச்சநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் முத்துப்பாண்டி வெற்றி

கோமாநேரி ஊராட்சி – முத்து வெற்றி

சாத்தான்குளம் – கோமாநேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முத்து வெற்றி

திருவாடானை – கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மாரிமுத்து வெற்றி

கரிசல்குளம்-தங்கப்பாண்டியம்மாள் வெற்றி

தூத்துக்குடி – கரிசல்குளம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் தங்கப்பாண்டியம்மாள் வெற்றி

மகாராஜபுரம் ஊராட்சி – புவனேஸ்வரி வெற்றி

கும்பகோணம் – மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் புவனேஸ்வரி வெற்றி

கும்பகோணம் – வைஜெயந்தி வெற்றி

கும்பகோணம் – திருப்புறம்பியம் ஊராட்சி தலைவர் தேர்தலில் வைஜெயந்தி வெற்றி

புதுச்சத்திரம் ஊராட்சி – லட்சுமி வெற்றி

திண்டுக்கல் – புதுச்சத்திரம் ஊராட்சி தலைவர் தேர்தலில் லட்சுமி வெற்றி

திண்டுக்கல் – நீலமலைக்கோட்டை ஊராட்சி தலைவர் தேர்தலில் ராதா தேவி வெற்றி