துரை

ராட்சிகளுக்கு வழங்கும் நிதியைத் தமிழக அரசு குறைத்துள்ளதால் போதுமான நிதி வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊராட்சிகளுக்கு வழங்கி வந்த நிதியில் 25% வரை குறைத்துள்ளது.  இதனால் ஊராட்சிகளில் நிதியின்மை ஏற்பட்டுப் பல வள்ர்ச்சிப்பணிகள் நின்று போய் உள்ளன.   தவிர தற்போதைய நிலையில் சொத்துவரி உள்ளிட்ட ஊராட்சி  வருமானங்களும் கணிசமாகக் குறைந்துள்ளன.  இதனால் பல ஊராட்சிகள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன

இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வி. புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் குப்புசாமி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில் அவர், “தமிழக அரசு ஊராட்சிகளுக்கு வழங்கும் நிதியில் 25% வரை குறைத்துள்ளதால் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

ஊராட்சிகளுக்குச் சொத்து வரி போன்றவை மூலமும் போதுமான வருமானம் கிடைக்கவில்லை.   எனவே சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பல பணிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஊராட்சிகள் செயல்பாடு இல்லாமல் முடங்கும் நிலை உண்டாகி இருக்கிறது.  எனவே கடந்த ஆண்டைப்போல் தற்போதும் நிதி வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என் கிருபாகரன், பி புகழேந்தி ஆகியோர் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.  நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளனர்.