ண்டிப்பட்டி

ணிகள் முடிவடைந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை – போடி அகல ரயில் பாதையில் நேற்று ஆண்டிப்பட்டி வரை சோதனை ஓட்டம் நடந்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மதுரை மற்றும் போடி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.  முதல் கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கிமீ வரை  துரிதமாக பணிகள் முடிக்கப்பட்டது.  அதன்  பிறகு உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரை  பணிகள் முடிவடைந்தன.

அதன்பிறகு இந்த ரயில் பாதை குறித்து எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருவதாக உள்ளூர் வாசிகள் கலவை தெரிவித்தனர்., நேற்று மத்திய ரயில் போக்குவரத்து அமைச்சக அதிகாரியான அபய்குமார் ராய் தலைமையில் மதுரை கோட்ட மேலாளர் லெனின் உள்ளிட்ட அதிகாரிகள் வழித்தடத்தை ஆய்வு செய்தனர்,.

அதன் பிறகு நேற்று மாலை உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.  11 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 21 கிமீ தூரம் உள்ள இந்த  பாதையில் வந்த ரயிலை மக்கள் திரண்டு வரவேற்றுள்ளனர்.  இந்த சோதனை ஓட்டம் மாலை 5.10 க்கு உசிலம்பட்டியில் இருந்து கிளம்பி மாலை 5.35 மணிக்கு ஆண்டிபட்டி ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.