சென்னை:

மிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோட்டையில்  நடைபெற உள்ளது. இதில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, கடநத  ஆகஸ்டு மாதம் வெளிநாடுகளுக்கு அரசு பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, 8 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக கூறப்பட்டது. அதையடுத்து, துணைமுதல்வர் ஓபிஎஸ்-சும் அமெரிக்காவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க 10நாள் பயணமாக சென்றுவிட்டு இன்று காலை சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், ஏற்கனவே எடப்பாடி வெளிநாடு சுற்றுப்பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்கள், புதிய தொழில் முதலீடுகள், உள்ளாட்சித் தேர்தல், ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.