மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்! மாநில தேர்தல் ஆணையம்

Must read

சென்னை,

மிழகத்தில் வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்டில் உறுதி அளித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடி வடைந்தது.  அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதையடுத்து  ஜனவரி 27ந்தேதி உள்ளாட்சி தேர்தல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டு உள்ளது அதற்கு அவகாசம் தேவை என கோரியது மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது. தொர்ந்து வழக்கு பிப்ரவரி 10ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அன்றைய விசாரணையின்போது,  மாநில அரசு  ஒத்துழைக்கவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியது. தொட்ர்ந்து விசாரணை பிப்ரவரி 17ந்தேதிக்கு தள்ளி வைத்து அன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது.

இதற்கிடையில், தமிழக சட்டசபையில்  உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி காலம் 6 மாதம் நீடிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

பிப்ரவரி 17ந்தேதி நடைபெற்ற இறுதி விசாரணையின்போது அரசாணை குறித்து நீதிபதிகள்  தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பினர்.  அப்போது அரசியல் குழப்பம் காரணமாக விசாரணையை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் கோரியது. அதற்கு  உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் விசாரணையை 20ந்தேக்கு  தள்ளி வைத்தது.

இன்று மீண்டும் உள்ளாட்சி தேர்தல் குறித்த இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம்,  தமிழகத்தில் மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என கூறியது.

அதற்கு நீதிபதிகள் உள்ளாட்சி , உத்தேச தேதியை கூற வேண்டாம். எப்போது தேர்தலை நடத்த முடியும் மற்றும் சரியான மற்றும் தெளிவான தகவல்களை  கூறும்படி  கூறியுள்ளது.

More articles

Latest article