மீஞ்சூர்

மீஞ்சூர் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டிருந்த 118 நாற்காலிகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்/.

வரும் 19 ஆம் தேதி தமிழகம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன.   அனைத்து வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பறக்கும் படையினர் தீவிரமாக வேட்டை நடத்தி வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டுள்ள பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர.

சென்னையை அடுத்த மீஞ்சூர் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுவதால் அங்கு அனைத்து வேட்பாளர்களும் தீவிரமாக களப்பணி செய்து வருகின்றனர்.  நேற்று மாலை மீஞ்சூரில் 16 ஆம் வார்டில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க நாற்காலிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகப் பறக்கும் படைக்குப் புகார் வந்தது.

இதையொட்டி நடந்த அதிரடி சோதனையில் காவிரி நகரில் ஒரு வீட்டில் புத்தம் புதிய 118 நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தன ,  அந்த வீடிட்டின் உரிமையாளர்களிடம் அதற்குரிய ஆவணங்கள் இல்லை.  மேலும் அவரால் இது குறித்து எந்த ஒரு விவரமும் சொல்ல முடியவில்லை.  எனவே அந்த 118 நாற்காலிகளைப் பறிமுதல் செய்த பறக்கும்  படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.