சென்னை:

இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி அளிக்கப்பட உள்ளதாக  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   நகர்ப்புற வீட்டு வசதி திட்டமிடலுக்காக அதன் இயக்குனர் வைத்த கோரிக்கையை அரசாங்கம் பரிசீலித்துள்ளதாகவும், குடியிருப்பு கட்டிடங்களுக்கு திட்டமிடுவதற்கான அனுமதி வழங்குவதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது 10,000 சதுரடி வரை கட்டுமானத்திற்கான அனுமதி வழங்க மாநில அரசு தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தம் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ன் ஒரு பகுதியாக மாற்றப்படும் என்றும், அதன் உத்தரவின்படி சிறிய கட்டிடங்களுக்கான அனுமதி வழங்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.