light_original

ஸ்மார்ட் போன்களுக்கு தான் தற்பொழுது இந்தியாவில் மாவுசு அதிகம். ஆனால், நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்கள் கையில் பிடிக்க முடியாத படி, அளவில் பெருத்துக்கொண்டே போகின்றது. பலர் அதிக விலைக்கு மொபைல் வாங்கிவிட்டு, அதை பாக்கெட்டுகளில் வைக்க முடியாத படி அவதிப்படுகின்றனர். ஒரு ஏ.டி.எம் கார்டு சைசில் ஒரு மைபைல் கிடைத்தால் எப்படி இருக்கும். ஆம், ஒரு சீன நிறுவனம் ஏ.டி.எம். கார்டு சைசில் லைட் மொபைல்-யை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த லைட் போன்கள் மூன்று வாரங்கள் வரை சார்ஜ் நிக்குமாம். ஸ்மார்ட் போன்கள் போன்றே இதிலும் நானோ சிம்கார்டு, மைக்ரோ யூ.எஸ்.பி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஸ்மார்ட்போன்கள் போன்று படங்கள் பார்க்க முடியாது. சாதாரண போன்களுக்கு பதில் இதை உபயோக்கிக்கலாம்.