low-battery-angry-manஎவ்ளோ தான் அதிக விலை கொடுத்து ஒரு மொபைல் போன் வாங்கினாலும், சார்ஜ் உடனே இறங்கினால் அது வேஸ்ட் தாங்க. நம்ம பயணம் செய்யும்போது, முக்கியமான போன் கால் பேசும்போது சார்ஜ் இல்லாம டென்ஷனாவோம். சார்ஜர் கையில இருந்தும் சார்ஜ் போடமுடியாம தவிப்போம். அந்த சமயத்துல ஏதாவது மேஜிக் நடந்து, சார்ஜ் ஆனா எப்படி இருக்கும். அப்படி தான் ஒரு விசித்திர சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.

நம்ம கத்தும் போது, அல்லது மொபைலை உடம்போடு ஒட்டிவைக்கும் போதும், வேகமாக காற்று வீசும் இடங்களில் வைக்கும் போதும் மொபைல் சார்ஜ் ஆகுமாம். உடனே மணிக்கணக்கில் மொபைல் யூஸ் பண்ணும் அளவிற்கு சார்ஜ் ஆகுமா எனக்கேட்க கூடாது. அவசர தேவைக்கு உபயோக்கிக்கும் அளவிற்கு உங்கள் மொபைல் சார்ஜ் ஆகலாம்.

800 உருளைகிழங்கு மற்றும் ஆப்பிள் உள்ள இடத்தில் ஜிங் மற்றும் காப்பர் வயர்களின் உதவியுடன் 20 mAh அளவு மின்சக்தியை பெற முடியுமாம். இனிமே கரண்டே இல்லாத காட்டுக்குள்ள நீங்க சிக்கிகிட்டா, இந்த மாதிரி டெக்னிக் யூஸ் பண்ணி சார்ஜ் பண்ணுங்க. கேக்குறதுக்கு காமெடி மாதிரி தான் இருக்கும், ஆனா உண்மைங்க.