சென்னை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம் என துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

துருக்கி, சிரியா பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்காம் காரணமாக ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்கள் நொறுங்கின. இதுவரை 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்படிண நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட உலக நாடுகளைச் சேர்ந்த மீட்புபடையினர், அங்கு விரைந்துள்ளனர்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக மீட்பு பணிகள் தொய்வு ஏற்பட்டு உள்ளதுடன் மேலும் இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என துருக்கி அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள்,  ஈராக், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் நிஉணரப்பட்டன.

இந்தியத் தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது.

இதுகுறித்து முதல்அமைச்சர் மு.க்.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன, மேலும் பெரும் உயிர் இழப்புகள், காயங்கள் மற்றும் அழிவுகளால் நான் வேதனைப்படுகிறேன். இந்த துயரமான நேரத்தில் இரு நாட்டு மக்களுக்கும் எனது இதயம் நெகிழ்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம் என பதிவிட்டுள்ளார்.