சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் பயன்பாட்டுக்காக  திறப்பதுதொடர்பாக ஆலோசிக்க இன்றுஅனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தலைமைச்செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

இதில் கலந்துகொண்ட திமுக எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிக்க மட்டும்  திறக்க அனுமதிக்கலாம் என ஆதரவு தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும  கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க கோரி மனுமீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், தமிழக அரசை எதிர்ப்பை  தொடர்ந்து, உச்சநீதிமன்றம் ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று  யோசனை கூறியிருந்தது.

இன்றைய விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தில்  தமிழகஅரசு  பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய  உள்ளது. முன்னதாக இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை தமிழகஅரசு நடத்தி வருகிறது.

இதில் திமுக சார்பில் கலந்துகொண்ட தூத்துக்குடி எம்.பி. கனிமொழி,  “ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்; ஆக்சிஜன் உற்பத்தியை தவிர்த்து வேறு எந்த செயல்பாட்டுக்கும் அனுமதி வழங்க கூடாது!” என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கலவரத்துக்கு திமுக எம்எல்ஏ கீதாஜீவன் தான் காரணம்: சட்டசபையில் எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு

திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை! ஸ்டாலின்