ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு? பரபரக்கும் தூத்துக்குடி… ஆலையை சுற்றி போலீசார் குவிப்பு!

Must read

தூத்துக்குடி: ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனமும், மத்தியஅரசும் ஆர்வம் காட்டி வரும் நிலையில்,  ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திமுகவும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதனால், தூத்துக்குடி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லை ஆலையை சுற்றி பலத்த காவல் போடப்பட்டு உள்ளது.  பல முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில்,  ஆலையை திறக்கக்கூடாது என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரனோ 2வது அலை உச்சம்பெற்றுள்ளதால், பல மாநிலங்களில்  ஆக்சிஜனுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சூழலைப் பயன்படுத்தி,  50க்கும் மேற்பட்ட உயிர்களை துப்பாக்சி சூடு மூலம் காவு வாங்கிய தூத்துக்குடி  ஸ்டெர்லைட் நிறுவனம்,  சீல் வைக்கப்பட்ட ஆலையை திறக்க அனுமதி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரனையின்போது,  ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதை அரசே ஏற்று ஏன் நடத்தக் கூடாது? என கேள்வி எழுப்பினர். ஆனால், தமிழக அரசோ,  கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை போல மீண்டும் ஒரு சம்பவம் நிகழக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்தது.

தூத்துக்குடி கலவரத்துக்கு திமுக எம்எல்ஏ கீதாஜீவன் தான் காரணம்: சட்டசபையில் எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாடே திணறிக் கொண்டிருக்கும் சூழலில், ஆலையை திறக்க தமிழக அரசு கெடுபிடி காட்டுவது உச்சநீதிமன்ற நீதிபதிகளை அதிருப்தி அடையச் செய்தது. ஆலையை திறப்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தற்போது அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், திமுக, ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால், தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பங்டடுள்ளது.  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆலையை சுற்றி நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஸ்டெர்லைட் குறித்து விவாதித்து வரும் நிலையில், காவல்துறையினர் அவர்களை கலைந்துசெல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

. கடந்த 23ம் தேதி கடந்த கருத்து கணிப்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக தூத்துக்குடியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுஷமே அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயைணப்பு வாகனம, தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமரானா டிரோன் மூலமாகவும் ஆட்சியர் அலுவலகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெல்லை தூத்துக்குடி உட்பட 5 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 2018 மே மாதம் 28ம் தேதி சீல் வைக்கப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் விவகாரத்தால் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article