ருணாச்சல மாநில கவர்னரை பதவி விலக மத்தியஅரசு வற்புறுத்துவதால், முடிந்தால் என்னை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யட்டும் என்றார்.
அருணாச்சல் ஆளுனர் ஜோதிபிரகாஷ் ராஜ்கோவாவை பதவி விலகும்படி மத்திய அரசு வலியுறுத்துவதாகவும் அதற்கு அவர் இணங்காமல், முடிந்தால் சட்டப்படி ஜனாதிபதி என்னைப் பதவிநீக்கம் செய்யட்டும் என்று தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.1-300x225ராஜ்கோவா அருணாசலப் பிரதேசத்தில் கவர்னராக இருந்து வருகிறார். அவர் அங்கு நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கலைத்து அதனால் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானார். 71 வயதான ராஜ்கோவா தற்போது உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகிறார். அவரால் புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில்கூட கலந்துகொள்ள இயலவில்லை. எனவே அவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரை பதவி விலகச்சொல்லி மத்திய அரசு தரப்பிலிருந்து மறைமுக அழுத்தங்கள் தருப்படுவதாக செய்திகள் வருகின்றன.
ஆளுநர் ராஜ்கோவா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு விளக்கம் கோரியதாகவும், அரசு தரப்பில் அப்படி எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று ராஜ்நாத்சிங் கூறியதாகவும் ஆளுநரின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.
இச்சூழலில் ஆளுநர் ராஜ்கோவா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்  தாம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்பவிருப்பதாகவும் , தமக்கு பதவி விலகும் எண்ணம் ஏதும் இல்லை, முடிந்தால் சட்டப்படி ஜனாதிபதி என்னைப் பதவி நீக்கம் செய்யட்டும் என்று தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.