திருப்பதி

நேற்று வனத்துறையினரிடம் திருப்பதியில் சிறுவனைத் தாக்கிய சிறுத்தை சிக்கி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க கர்னூலைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர். திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.

செய்வதறியாமல் திகைத்த சிறுவனின் பெற்றோர், போலீசார் மற்றும் பக்தர்கள் தங்கள் செல்போன்களில் டார்ச் அடித்தபடி வனப்பகுதிக்குள் தேடிச்சென்றனர். சிறுவனின் அழுகுரலை வைத்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள புதர் அருகே சிறுவன் ரத்த காயத்துடன் கதறி அழுது கொண்டிருந்து கண்டறியப்பட்டது.. அங்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது சிறுவன்  நலமுடன் உள்ள நிலையில், சிசிடிவி காமிராக்கள் மூலம் சிறுத்தை தப்பிச் சென்ற பாதையில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. வனப்பகுதியில் இரண்டு இடங்களில் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைக்கப்பட்டது.  நேற்று நள்ளிரவு வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் நேற்று நள்ளிரவில் சிறுத்தை சிக்கியது.

நேற்று பிடிபட்ட சிறுத்தையை வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் விடுவதா அல்லது வனப்பகுதியில் விடுவதா என்பது குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.