லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் சங்கிலித்தொடர் பட வரிசையின் (LCU) அடுத்த படமான லியோ அக்டோபர் 19 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய், சஞ்சய் தத் இருவரும் தந்தை மகனாக நடித்துள்ள இந்த படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான கார்த்தி நடித்த கைதி (2019) மற்றும் கமல்ஹாசன் நடித்த விக்ரம் (2022) ஆகிய படங்களின் வரிசையில் மற்றுமொரு கேங்ஸ்டர் படம் என்று கூறப்படுகிறது.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது.

லியோ படத்தின் தமிழ் போஸ்டர் நேற்று வெளியானதை அடுத்து இந்தி போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இந்தி வெளியீட்டு உரிமையை கோல்ட்மைன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.