சட்டப்பேரவை இன்று வனம், சுற்றுச்சூழல், விளையாட்டு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம்

Must read

சென்னை:
ட்டப்பேரவை இன்று வனம், சுற்றுச்சூழல், விளையாட்டு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

கடந்த மாதம் 18ம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவையில் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், 19ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 6ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. இன்று சட்டப்பேரவை இன்று வனம், சுற்றுச்சூழல், விளையாட்டு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் முறையே ராமச்சந்திரன், மெய்யநாதன் ஆகியோர் பதிலுரை அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

More articles

Latest article