சென்னை: அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர் என, அண்ணா குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த  தமிழக முதல்வரும், திராவிட முன்னற்றக் கழகத்தை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவ சிலைக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

தமிழகஅரசு சார்பில், முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிலையில், அண்ணா பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், ,“அண்ணா, திராவிடப் பெருங்கனவு கண்டு, தமிழர் நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர். சமூக நீதிக் கொள்கைகளை அரசியல் சட்டமாக்கி, சமநீதி சமத்துவச் சீர்திருத்தம் தந்தவர். தமிழக அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர்” என குறிப்பிட்டுள்ளார்.