டில்லி

பேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் அது குறித்த ஆடியோ  பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்த போதிலும் எதிர்க்கட்சி கள் அதை ஏற்கவில்லை.   இது குறித்து மறு  சீராய்வு மனுவை பாஜக வின் முன்னாள் தலைவர் கள் அளித்துள்ளனர்.

தற்போது கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் குறித்து  கோவா மாநில சுகாதார அமைச்சர் விஸ்வநாத் ரானே மற்றும் அடையாளம் தெரியாத நபர் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

அந்த ஆடியோ பதிவில் உள்ளதாக கூறப்படுவதாவது:

அடையாளம் தெரியாத நபர் : மாலை வணக்கம் ஐயா

விஸ்வநாத் ரானே : மாலை வணக்கம் பாஸ்.  நான் இன்று உங்களை அழைத்திருந்தேன்.  இன்று மூன்று மணி நேரம் அமைச்சரவை கூட்டம் இருந்தது.

அ : சரி

வி : நான் சொல்வதை ரகசியமாக வைத்திருங்கள்

அ ; சரி சரி

வி : அங்கு நிறைய தகராறு.   உங்களுக்கு தெரியுமா   நிறைய நிறைய தகராறு.  நிலேஷ் கேப்ரல் அவரு தொகுதியில் இருந்து ஏராளமான பொறியாளர்களை அணியில் சேர்த்துள்ளார்.   ஜேயேஷ் சல்கோன்கர் அந்த பட்டியலை வரிடம் காட்டினார்.  அதனால் அவருடன் அனைவரும் தகராறு செய்ய தொடங்கி விட்டனர்.  வேலையே நடக்காமல் பணி நியமனம் செய்ததால் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அ ; சரி

வி : அதைத் தவிர முதல்வர் தனது படுக்கை அறையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து தகவலும் இருப்பதாக ஒரு அருமையான தகவல் அளித்தார்.

அ : (அதிர்ச்சியுடன்) என்ன சொல்கிறீர்கள்?

வி : நான் சரியாகத்தான் சொல்கிறேன்

அ : அடக் கடவுளே

வி :  இதைக் கொண்டு நீங்கள் ஒரு செய்தி தயாரிக்கலாம்.  அத்துடன் நீங்கள் உங்களுக்கு தெரிந்த யாராவது அமைச்சரவையில் இருந்தால் அவர்களிடம் கேட்டு சரி பார்க்கலாம்

அ : சரி

வி : இதன் மூலம் இதில் ஏதோ உள்ளது தெரிய வருகிறது.   அவர் ஏதோ ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார்.

அ : நிச்சயமாக

வி : அனைத்தும் தனது படுக்கை அறையில் உள்ளதாக கூறி உள்ளார்.  ஆம் இந்த அடுக்ககத்தில்

வி : ரஃபேல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது.என முதல்வர் கூறியதன் மூலம் தற்போது அவர் இந்த தகவலை டில்லிக்கு யாராவது சொல்ல வேண்டும் என எண்ணுகிறரா அல்லது வேறு ஏதாவதா? எனக்கு ஒன்றும் புரியவில்லை

அ : அடக் கடவுளே

வி : இதை சொல்லவே நான் உங்களை அழைத்தேன்.

அ : மூன்று மணி நேரம் அமைச்சரவை கூட்டம் நடந்ததே.. அதில் முக்கியமான விஷயம் ஏதும் இருந்ததா?  அதாவது வேறு ஏதும்?

வி : ஒன்றுமில்லை.  திசையே அறியாமல் கூட்டம் சென்றுக் கொண்டு இருந்தது.  வெட்டியாக…

அ : இவர் ஏன் திடிரென இப்படி… சட்டப்பேரவை கூட்டம் கூட்ட சொல்வதன் காரணம் என்ன என நீங்கள் கூற முடியுமா?  அதாவது சபாநாயகர்?

வி : அவர் ஆர் எஸ் எஸ் தன்னை முதல்வர் ஆக உதவி செய்யும் என நம்புகிறார்.

அ : நல்லது நல்லது.  அது அவருடைய சொந்த விருப்பம்

வி : அவர் சொந்த விருப்பம் தான்.   ஆனால் அவருக்கு யாரோ உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார்கள்.  அது உண்மை.   அவர்கள் விஜய் நிச்சயம் உத்வி செய்ய மாட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.

அ ; அடக் கடவுளே

வி : ஆனால் நாங்கள் சந்திக்க உள்ளோம்.  நீங்கள் இந்த தகவலை டில்லிக்கு சொல்ல வெண்டும்.  இதன் விளைவுகள் என்ன என்பதையும் காண வேண்டும்.

அ:  நீங்கள் என்னிடம் சொல்லி விட்டீர்கள் அல்லவா?  நீங்கள் எப்போது எதை சொன்னாலும் நான் செய்கிறேன்

வி : நீங்கள் இது குறித்த விவரஙக்ளுடன் தயாராக இருங்கள்.  நான் சொல்கிறேன்.  இது இதே திசையில் செலும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்

அ : சரி

வி : விரைவில் நான் சொல்கிறேன்

அ : நீங்கள் எப்போது வரச் சொனாலும் நான் தயாராக இருக்கிரேன்

வி : சரி

அ : விடை பெறுகிறேன்.

இந்த உரையாடலின் மூலம் ரபேல் ஒப்பந்தத்தில் பல ரகசியங்கள் அடங்கி உள்ளதும் அதன் விவரங்கள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு தெரியும் என்பதும் தெளீவாகி உள்ளது.   ரபேல் ஒப்பந்தம் இடும் போது மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இருவரும் பேசும் ஆடியோ செய்தி