lawrence-parts-with-title-for-vijay
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சந்திரமுகி என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்தை இயக்கிய பி.வாசு இப்போது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ராகவா லாரன்சை வைத்து “சிவலிங்கா” என்ற தலைப்பில் இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமாரை வைத்து இதே தலைப்பில் இந்த திரைப்படத்தை எடுத்து அங்கு அந்த திரைப்படம் நூறு நாட்கள் மேல் ஓடியது குறிப்பிடத்தக்கது.
சிவலிங்கா தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக இறுதி சுற்று புகழ் ரித்திகா சிங், வடிவேலு, ஊர்வசி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை வரும் பொங்களுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அதே நாளில் தான் விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் “பைரவா” திரைப்படமும் வெளியாகவுள்ளது, ஆனால் சிவலிங்கா திரைப்படத்தின் கதையை விட மாறுபட்ட கதையாக பைரவா உள்ளதால் தைரியமாக அன்று வெளியிடப் போவதாக கூறப்படுகின்றது.
பைரவா தலைப்பையே ராகவாவிடம் விஜய் கேட்டுக் கொண்டதால் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.