டில்லி:

நிலுவை வழக்குகளால் நீதித்துறையின் சீரழிவுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தான் காரணம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

பேஸ்புக் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா மூலம் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் பயன்படுத்தியதாக மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியிருந்தார். இதை மறுத்த காங்கிரஸ் பாஜக தான் இந்த நிறுவனத்தின் சேவையை பயன்படுத்திக் கொண்டது என்று குற்றம்சாட்டியது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘‘நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில நிலுவை இருப்பதற்கு ரவி சங்கர் பிரசாத் தான் காரணம். நீதிபதிகள் பற்றாகுறை உள்ளது. இதை கவனிக்காமல் அற்ப்பமான போலி செய்திகளை கூறி வருகிறார்.

நாட்டின் நீதி எந்திரம் நிலுவை வழக்குகளால் சீர்குலைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 55 ஆயிரம், உயர்நீதிமன்றங்களில் 37 லட்சம், கீழமை நீதிமன்றங்களில் 2.6 கோடி வழக்குகள் நிலுவை உள்ளது. 400 உயர்நீதிமன்ற நீதிபதிகள், 6 ஆயிரம் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.