கொள்ளையர்களால் தாக்ககப்பட்ட லாவண்யா காவல் ஆணையருக்கு நேரில் நன்றி

சென்னை:

ள்ளிக்கரணையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி பெண் ஊழியர் லாவண்யா சிகிச்சை முடிந்து, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து நன்றி.

எனது தைரியத்தால் மட்டும் இதிலிருந்து விடுபடவில்லை, காவல்துறை உள்ளிட்ட பலரது ஆதரவால்தான் விடுபட்டுள்ளேன் – லாவண்யா..

சோழிங்கநல்லூர்  அருகே உள்ள  ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்த  பெண் என்ஜினீயர் லாவண்யா  கடந்த பிப்ரவரி மாதம்  12-ந் தேதி இரவு   பெரும்பாக்கத்தை அடுத்த நுங்கம் பாளையத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், லாவண்யா தலையில் இரும்பு கம்பியால் தாக்கி அவரிடம் இருந்து நகைகளையும்  ஓட்டி வந்த மொபட்டையும் பறித்துச் சென்றனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தலையில் தாக்கப்பட்டதால், லாவண்யா கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் 11 பேரை கைது  குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைத்தனர்.

 லாவண்யாவை தாக்கிய கொள்ளையர்களுடன் காவல்துறையினர் 

இந்நிலையில் கடந்த 3 மாதமாக சிகிச்சை பெற்று வந்த லாண்யா தற்போது நன்றாக குணமடைந்துவிட்டார். இதையடுத்து, இன்று மாநகர காவல் ஆணையரை நேரில்  சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லாவண்யா, தற்போது நான் நலமுடன் இருப்பதற்கு எனது எனது தைரியம் மட்டும் காரணம் அல்ல என்றும்,  அதன் காரணமாக இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை, காவல்துறை உள்பட   பலரது ஆதரவால்தான் விடுபட்டுள்ளேன்  என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.