டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதமாற்றம் காரணமாக தற்கொலை நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், பள்ளி சார்பில்  மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், மாணவியின் தந்தை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில்  உள்ள விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். அவர் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. லாவண்யாவை பள்ளி நிர்வாகம் கடந்த இரு ஆண்டுகளாக மதமாற்றம் செய்ய வலியுறுத்தி வந்தாக கூறப்பட்டது. இதுதொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இநத் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கை கடந்த ஜனவரி 31-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில்  இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. அதில், தனது மகள் லாவண்யாவின் தற்கொலை விவகாரம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை வழக்கில், பள்ளி நிர்வாகம் சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், மாணவி தரப்பில் இருந்து கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு