சென்னை:
இன்று முதல் தானியங்கி இயந்திரத்தில் மஞ்சள் பை பெறும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால், பொதுமக்கள் மஞ்சள் பைyஐ பயன்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை தரும் திட்டம் தொடங்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்று தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு என்பவர் மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை கோயம்பேடுக்கு வரும் பயணிகள் இனி இந்த இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சள் பையை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.