இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி (Thalapathy 65) உருவாகவுள்ளது .விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.
விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார் .அதன்படி அவர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைவார்.
இந்நிலையில் படத்தைப் பற்றிய சில விஷயங்கள் கசிந்துள்ளன. அதன்படி விஜய்க்கு படத்தில் இரட்டை வேடமாம். அதில் ஒரு கதாபாத்திரம் முழுக்க முழுக்க நெகட்டிவ் தன்மை கொண்டதாம். மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.