சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபல வி.ஜே.ஆனந்த கண்ணன் 2008-ஆம் ஆண்டு வெளிவந்த வெங்கட் பிரபுவின் ‘சரோஜா’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

புற்றுநோயுடன் போராடி வந்த அவர், ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது சொந்த நாடான சிங்கப்பூரில் காலமானார். 48 வயதில் ஆனந்த கண்ணன் மறைந்த செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மரணப்படுக்கையில் இருந்த ஆனந்த கண்ணன், தான் இறந்து விட்டால், தனது குடும்பத்தினர் யாரும் அழ வேண்டாம் என்றும், தன்னை மகிழ்ச்சியாக அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டாராம். ஆனந்த கண்ணனின் மனைவி ராணியும், அவரது குடும்பத்தினரும் இதை அப்படியே செய்திருக்கிறார்கள்.