டெல்லி
கடந்த மாதம் இந்தியாவில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது
இன்று மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் வணிகப் பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த மாதத்தில் (ஜனவரி) 2.38 சதவீதம் குறைந்து 36.43 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் இது 37.32 பில்லியன் டாலர்களாக இருந்தது.
கடந்த மாதம் இறக்குமதி அதிகரித்தள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 53.88 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10.28 சதவீதம் அதிகரித்து 59.42 பில்லியன் டாலர்களாக உள்ளது.
சென்ற மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை, அல்லது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான இடைவெளியானது 22.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதியானது 1.39 சதவீதம் அதிகரித்து, 358.91 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 7.43 சதவீதம் அதிகரித்து 601.9 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது.