டில்லி
இந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யக் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அதாவது 2021-22ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முதலில் ஜூலை 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாகப் பலரும் வருமானவரிக் கணக்கை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தக்கல் செய்ய முடியாமல் அதை நீட்டிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
அதையொட்டி நேரடி வரிகள் வாரியம் இந்த அவகாசத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தாக்கம் இன்னும் முழுவதுமாக நீங்கவில்லை,. எனவே வரி செலுத்துவோர் இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அவர்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 2021 – 22 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யக் கால் அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]