டெல்லி: நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் ஐஐடி தேர்வாகி உள்ளது. தொடர்ந்து 3 வது ஆண்டாக முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது. இந்த தகவலை  மத்திய கல்வி அமைச்சகம்தெரிவித்து உள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  இன்று.  தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) ஆறாவது பதிப்பில் 2021 ஆம்  ஆண்டின் சிறந்த கல்லூரிகள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.  இதில் நாட்டின் சிறந்த முதல் பத்து பொறியியல் நிறுவனங்களில் எட்டு ஐஐடிக்களும் இரண்டு தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும் (என்ஐடி) இடம் பிடித்தன.

சென்னையில் அமைந்துள்ள  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) மெட்ராஸ் நாட்டில் உள்ள நிறுவனங்களில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பெங்களூரு ஆராய்ச்சி நிறுவனங்களில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) அகமதாபாத் சிறந்த பி-பள்ளியாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது,

அதே நேரத்தில் ஜாமியா ஹம்தார்ட் மருந்தியல் படிப்புக்கான சிறந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து 3 வருடங்களாக சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், IISc பெங்களூருவின் பெயர் இரண்டாம் இடத்திலும், IIT பம்பாய் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

சிறந்த மருத்துவக் கல்லூரிகளில்,  முதலிடத்தில் எய்ம்ஸ் டெல்லி இடம்பெற்றுள்ளது., சண்டிகர் (PGIMER Chandigarh) இரண்டாமிடத்திலும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

சிறந்த பொறியியல் கல்லூரிகளில்,  முதல் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் 8 IIT  மற்றும் 2 NIT கல்லூரிகள் உள்ளன. இந்த பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதல் இடத்தையும், ஐஐடி டெல்லி இரண்டாம் இடத்தையும், ஐஐடி பம்பாய் மூன்றாம் இடத்தையும், ஐஐடி கான்பூர் நான்காவது இடத்திலும் உள்ளன.  ஐஐடி கரக்பூர்  ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் என்ஐடி திருச்சிராப்பள்ளி NIT Tiruchirappalli  9வது இடத்திலும் மற்றும் என்ஐடி சுரத்கல் 10 வது இடத்தில் உள்ளது.

சிறந்த கல்லூரிகளில்,  டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரி சிறந்த கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, LSR மகளிர் கல்லூரி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னை லயோலா கல்லூரி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், ஐஐஎஸ்சி பெங்களூரு ((IISc Bengaluru) முதலிடத்தையும், ஐஐடி மெட்ராஸ் இரண்டாம் இடத்தையும், ஐஐடி பம்பாய் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

 சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பட்டியலில்  ஐஐஎம்  அகமதாபாத் சிறந்த மேலாண்மை நிறுவனம் என்ற பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில், ஐஐஎம்   பெங்களூருவின் பெயர் இரண்டாம் இடத்திலும்,   கொல்கத்தா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

சிறந்த பார்மஸி கல்லூரிகளில், டெல்லியைச் சேர்ந்த ஜாமியா ஹம்தார்ட் (Jamia Hamdard) சிறந்த மருந்துக் கல்லூரிகளின் பிரிவில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பெயர் இரண்டாமிடத்திலும், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்சஸ், பிலானி இரண்டாமிடத்திலும் உள்ளது.

வருடாந்திர தரவரிசையில் பல்கலைக்கழகங்களின் பிரிவில்  ஐஐஎஸ்சி பெங்களூரு (IISc Bengaluru) முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் டெல்லி (JNU டெல்லி) இரண்டாவது இடத்தில் உள்ளது மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) மூன்றாவது இடத்தில் உள்ளது.

நாட்டின் சிறந்த முதல் 10 பொறியியல் கல்லூரிகளின் விவரம்:

  1. ஐஐடி மெட்ராஸ
  2. ஐஐடி டெல்லி
  3. ஐஐடி பம்பாய்
  4. ஐஐடி கான்பூர்
  5. ஐஐடி கரக்பூர்
  6. ஐஐடி ரூர்கி
  7. ஐஐடி கவுகாத்தி
  8. ஐஐடி ஹைதராபாத்
  9. என்ஐடி திருச்சப்பள்ளி
  10. என்ஐடி சுரத்கல்

அனைத்து பிரிவுகளையும் சேர்த்த நிலையில் முதல் 10 கல்வி நிறுவனங்களின் பட்டியல் 

ஐஐடி மெட்ராஸ், IISc, பெங்களூர், ஐஐடி பம்பாய், டெல்லி ஐஐடி, ஐஐடி கான்பூர், ஐஐடி கரக்பூர், ஐஐடி ரூர்கி, ஐஐடி கவுகாத்தி, ஜேஎன்யு, டெல்லி, ஐஐடி ரூர்கி, BHU, வாரணாசி

சிறந்த 5 மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பட்டியல் (MBA கல்லூரிகள்):

ஐஐஎம், அகமதாபாத், ஐஐஎம், பெங்களூர், ஐஐஎம், கல்கத்தா, ஐஐஎம், கோழிக்கோடு, ஐஐடி, டெல்லி

சிறந்த 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல்

1. IISc, பெங்களூர்

  1. ஜேஎன்யு, டெல்லி
  2. BHU, வாரணாசி
  3. கல்கத்தா பல்கலைக்கழகம், மேற்கு வங்காளம்
  4. அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
  5. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, புது டெல்லி
  6. மணிபால் உயர்கல்வி அகாடமி, மணிபால், கர்நாடகா
  7. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா
  8. ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத்
  9. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகார், உத்தரபிரதேசம்