சென்னை: அரசு நிலம் முறைகேடாக நெடுஞ்சாலைத்துறைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது தொடர்பாக  காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் ஆய்வு மற்றும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள பீமந்தாங்கல் பகுதியில்  சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்,  அரசாங்க நிலங்கள் அபகரிக்கப்பட்டு பல கோடி நில முறைகேடு நடைபெற்றது தெரிய வந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜா இடையே சென்னை-பெங்களூரு புறவழிச்சாலை ஆறு பாதைகளாக அகலப்படுத்த NHAI நிலம் கையகப்படுத்தியது. இது தொடர்பாக  அந்த பகுதியில் 87 நில உரிமையாளர்களுக்கு ரூ .123 கோடி பணம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செலுத்தப்பட்டு உள்ளது.

இந்த விஷயத்தில், கையகப்படுத்தப்பட்ட  நிலங்கள், அரசுக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. இதை ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘இது தொடர்பான புகாரின்பேரில், கடந்த ஆண்டு நில நிர்வாக ஆணையர் அலுவலகம், இந்த திட்டத்திற்காக பீமந்தங்கலில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான பட்டாக்கள் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்றும், நிலம் சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு மாற்றப்பட்டது என்றும் கண்டறிந்தது.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளில் நிலம் விற்பனை தொடர்பான ஆய்வுகளை செய்து வருகிறது.

புகாரின் பேரில், காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம்  இருந்து ரூ .33 கோடி பெற்ற இருவரை கைது செய்தனர். மோசடி மூலம் பட்டாக்களைப் பெற்றதற்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீதமுள்ள நில உரிமையாளர்களின் பட்டாக்கள் 1985 வரை உண்மையான பதிவுகளைப் பெற்றுள்ளன.

முறைகேடு நடைபெற்ற நிலங்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்றும், பின்னர் அவை,  ஆவணங்கள் இல்லாமல் தனிநபர்களுக்கு மாற்றப்பட்டு விற்பனை  செய்யப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, தற்போது விற்பனை செய்யப்பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. . “காஞ்சீபுரம் மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்த நிலம் கையகப்படுத்தப்பட்ட வேடல், எனதூர், பமல், ஸ்ரீபெரம்புடூர் மற்றும் பென்னலூர் ஆகிய ஐந்து கிராமங்களுக்கான நில பதிவுகளை ராய்ந்து வருகிறோம்” என்று ஒரு அதிகாரி தெரிவித்து உள்ளார்.