சென்னை: சென்னை பருநகர மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தற்காலிக பதவிகளில் பணியாற்றி வரும் ஊரியர்களின் பணிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும், ஊழியர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில்,  தற்காலிகமாக 1,896 பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. பின்னர், 2012ம் ஆண்டு அவை 1,150 குறைத்தது. மீதமுள்ள  746  தற்காலிக பதவிகளின் பணிக்காலம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 1,150  பணிகளுக்கு உரிய பதவிக்காலம்  மேலும் 3 ஆண்டுக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் தொகையும் பெருகி வருவதால், தற்காலிக பதவிகளின் தேவை அவசியம் இருப்பதால், அந்த பணிகளுக்கு,  மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன்,  சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட 4 துணை ஆணையர் பதவிகள் மற்றும் அதனைச் சார்ந்த 4 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.