டெல்லி: அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறையத்தொடங்குகிறது என்பது தவறானது என இந்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியான  லான்செட் ஆய்வு தகவலில் ஆக்ஸ்போர்ட்  அஸ்ட்ராஜெனெகா கொரோனா  தடுப்பூசியின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறையத் தொடங்குகிறது என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு இந்திய மருதுதுவ நிபுணர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில் சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்துதான் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்து வழங்குகிறது . இதனால், சீரம் நிறுவனத்தின் கோவிஷீலடு தடுப்பூசியின் தரம் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து,  இந்திய மருத்துவ நிபுணர்கள் லான்சென்ட் ஆய்வு தகவல் தவறானது என சுட்டிகாட்டி விளக்கம் அளித்துள்ளனர்.

தற்போது இந்தியா உள்பட உலக நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று பரவலை, நடைமுறையில் உள்ள எந்தவொரு தடுப்பூசியும் தடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் உள்பட பல நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் 2 டோஸ் செலுத்திய 3 மாதங்களுக்கு பின் குறைகிறது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட்டில் ஆய்வு தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

லான்செட் ஆய்வில்,  பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்து பெறப்பட்ட புள்ளவிவரங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக வும், ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ள இருக்க பூஸ்டர் டோஸ் அவசியம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

லான்செட்  ஆய்வு தகவல் தவறானது என இந்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். 90 நாட்களுக்குப் பிறகு கோவிஷீல்டில் குறையும் ஆன்டிபாடிகள் பற்றிய லான்செட் ஆய்வு தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (IMA)  தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால்,  “தடுப்பூசிகள் ஆன்டி பாடிகள் மற்றும் டி செல் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன என்று பெரும்பாலான அறிவியல் தகவல்கள் கூறுகின்றன. இது சில உண்மை களை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு பெரும்பாலான அறிவியல் தரவுகள்  மற்றும் ஆய்வுகள் உள்ளன. இது தொடர்பாக உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட ஆன்டிபாடிகள்  நின்றுவிடவில்லை, அது இன்று தொடர்கிறது என்பதை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் டி செல் நோய் எதிர்ப்பு சக்தி அல்லது/மற்றும் செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம், இது எல்லா சந்தர்ப்பங்களிலும்  நீண்ட காலம் நீடிக்கும். நீங்கள் வைரஸால் பாதிக்கப்பட்டால்,  அது கோவிஷீல்டு மூலம் பெற்ற  நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலம் நீடிப்பதை உணர முடியும். இது உங்களை நோயில் இருந்து தடுக்கும் மற்றும் நீங்கள் பெறும் கடுமையான தொற்றுநோயிலிருந்து வெளியே வர உதவும்.

“துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆய்வில் ஒரு விசித்திரமான வழிமுறை உள்ளது, இது என் சகாக்கள் உட்பட நாம் யாரும் இதற்கு முன் பார்த்திராதது. இந்த விஷயத்தில் எனது கருத்து என்னவென்றால், ஆய்வு ஆசிரியர்களை இழிவுபடுத்தாமல், முடிவுகளைப் புரிந்துகொள்ளும் போது வழிமுறைகள் மிகவும் முக்கியம். ஒருவர் ஒருபோதும் கண்மூடித்தனமாக முடிவுகளுக்கு வரக்கூடாது என்பதே எனது முடிவு.  இந்த லான்செட் ஆய்வு ஆசிரியரின் முடிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது” என்றார்.

“எப்போதும் வழிமுறையைப் பார்த்து, தரவைப் பாருங்கள். நமக்குப் புரியவில்லை என்றால், ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், அதைத் தெரிந்த ஒருவரால் இயக்கி பார்க்க முடியும். ஆனால்,  துரதிர்ஷ்டவசமாக லான்செட் ஆய்வில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்

லான்செட் ஆய்வு தகவல் குறித்து கூறிய ரிசர்ச் செல் கேரளா மாநில ஐஎம்ஏ துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், லான்செட் தகவலால்  அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை எடுத்துள்ள   உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பீதி உள்ளனர். இந்தியாவில் செலுத்தப்பட்டு வரும்,  கோவாக்சின், கோவிஷீல்டு  ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் வழங்கும் பாதுகாப்பைப் பொருத்தவரையில் எந்த சரிவுகளும் காணப்பட வில்லை. இந்த தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு, மக்கள் திடீரென்று நோய்வாய்ப்படுகிறார்கள் என்பதற்கான எந்த சமிக்ஞையும் இந்தியாவில் எங்கிருந்தும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இன்று வரை 236 ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளதால், அரசாங்கமும் மருத்துவ நிபுணர்களும் கோவிட்-19 தகுந்த நடத்தை யைப் பின்பற்றுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், தொற்று பரவலை தடுக்க வேண்டுமென்றால், நாம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்.

மூடிய அறைக்குள் மக்கள் பேசிக் கொண்டிருக்க வேண்டும்,  ஆரவாரம் செய்வதோ, கொண்டாட்டங்களில் ஈடுபடுவதோ,  சுற்றித்திரிவதோ வேண்டாம். அதே வேளையில்,  அரசியல் கட்சியினர் உள்பட எவரும்,  மக்களைச் சந்திக்க விரும்பினால், அவர்களை வெளியில் அல்லது திறந்த வெளியில் சந்தியுங்கள்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் முகமூடிகளை பயன்படுத்த கற்றுக்கொண்டோம். பெரும்பாலோனோர்  முகமூடிகளை அணிகிறார்கள். ஒவ்வொருவருக்கும் முகமூடிகள் முக்கியம். ஏன் தெரியுமா? ஏனெனில் வைரஸை சுமக்கும் பலருக்கு தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியாது. எனவே அவர்கள் அணிந்திருந்தால் முகமூடி, அவை காற்றில் உள்ள வைரஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. அதனால், அவை மற்றவர்களைப் பாதுகாக்கின்றன. எனவே, முகமூடி அணிவதன் முக்கிய நோக்கம் இதுதான்.

இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.