சென்னை:  தமிழ்நாட்டில் இன்று மேலும் 606 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக தொடர்கிறது. மேலும் தமிழ்நாட்டில் நாளை (ஞாயிறு) மெகா தடுப்பூசி முகாமும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 12 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  39 பேருக்கு  ‘s’ மரபணு குறைபாட்டுடன்  கூடிய கொரோனா ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை  இன்று இரவு 7.30 மணி அளவில் தகவல் வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று 1,01,185 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 5,68,26,433 ** சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 606 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,43,427 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 11 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,725 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 685 பேர்  குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,69,848 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 6,708 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 165  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 56,11,69 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் பலியாகி உள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 8644 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 132 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 55,11,67 தற்போது சென்னையில் மட்டும்  1358 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 1
செங்கல்பட்டு 50
சென்னை 165
கோவை 87
கடலூர் 14
தருமபுரி 5
திண்டுக்கல் 5
ஈரோடு 41
கள்ளக்குறிச்சி 1
காஞ்சிபுரம் 16
கன்னியாகுமரி 9
கரூர் 10
கிருஷ்ணகிரி 5
மதுரை 8
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 0
நாமக்கல் 23
நீலகிரி 5
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 2
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 0
சேலம் 27
சிவகங்கை 2
தென்காசி 3
தஞ்சாவூர் 10
தேனி 1
திருப்பத்தூர் 3
திருவள்ளூர் 17
திருவண்ணாமலை 3
திருவாரூர் 3
தூத்துக்குடி 7
திருநெல்வேலி 4
திருப்பூர் 42
திருச்சி 11
வேலூர் 13
விழுப்புரம் 2
விருதுநகர் 4

தமிழ்நாடு முழுவதும் நாளை 16வது மெகா தடுப்பூசி முகாம்….