டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது.

தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்து வருகிறார்.

தற்போது இந்தியாவில் படப்பிடிப்புக்குத் தோதான சூழல் இல்லை என்பதால் துருக்கியில் படப்பிடிப்பைத் தொடர படக்குழு முடிவு செய்து அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

துருக்கியில் ரசிகர்களுடன் ஆமிர் கான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. மூக்குக் கண்ணாடியுடன், சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் ஆமிர் கான் உள்ளார்.

‘லால் சிங் சட்டா’ எனும் இப்படத்தில் கரீனா கபூர், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.