‘லால் சிங் சட்டா’ திரைப்படத்தில் கார்கில் போர் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கவிருக்கிறார்.

டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump). தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்து வருகிறார்.

கொரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, அனுமதி கிடைக்கப்படும் நேரத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது.

மேலும், விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்ட கதாபாத்திரத்தில் தற்போது நாக சைதன்யா நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது. நாயகனின் நெருங்கிய நண்பன் கதாபாத்திரத்தில் அவர் தோன்றவுள்ளார். படப்பிடிப்புத் தேதிகளைச் சரியாக ஒதுக்கமுடியாத காரணத்தால் விஜய் சேதுபதி இந்தப் படத்திலிருந்து விலகியது நினைவுகூரத்தக்கது.