ப்ளூ சட்டை மாறனின் “ஆன்டி இண்டியன் ” திரைப்படத்தின் பரபரப்பு அப்டேட்….!

Must read

எந்த திரைப்படமாக இருந்தாலும், யார் ஹீரோவாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் துணிச்சலாக விமர்சிப்பவர் ப்ளு சட்டை மாறன்.

திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன் யூட்யூபில் தமிழ் டாக்கிஸ் எனும் சேனல் வைத்து திரைப்படங்களுக்கு விமர்சனம் கொடுத்து வந்தார்.

ஆன்டி இண்டியன் எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர்.

மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆன்டி இண்டியன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வரும் ரமலான் பண்டிகையை ஒட்டி ரமலான் தினத்தன்று, ப்ளூ சட்டை மாறன் தொடர்ச்சியாக இயங்கிவரும் யூடியுப் தளத்திலேயெ வெளியிட உள்ளதாக அவரே அறிவித்திருக்கிறார்.

 

More articles

Latest article