மும்பை:

மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரில் பெண்களுக்கான ஹுக்கா பார் திறக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


நீண்ட குழாய் மூலம் புகைக்கும் பழக்கம் அரேபிய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ளது.
வடமாநிலங்களிலும் கிராமப்புறங்களில் இன்னும் இந்த பழக்கம் இருக்கிறது.

இத்தகைய ஹுக்காவுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், மும்பையில் பெண்களுக்கான ஹுக்கா பார் தொடங்க மும்பை மாநகராட்சி ஆணையர் அஜோய் மேஹ்தா அனுமதி கொடுத்துள்ளதாக செய்தி வெளியானது.

அதுவும் மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரிலேயே பெண்களுக்கான ஹுக்கா பார் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கான அனுமதி உத்தரவும் வழங்கப்பட்டது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட ஹுக்கா பாருக்கு ஆணையர் அனுமதி கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெயர்,முகவரி, தொழில் பெயர், பான் கார்டு, எத்துனை பேர் வேலை பார்க்கிறார்கள், இமெயில் முகவரி இருந்தாலே போதும். மும்பை மாநகராட்சி அனுமதி கொடுத்துவிடும் நடைமுறை இருப்பதே இது போன்ற செய்திகள் உலா வருவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்காக மாநகராட்சியின் ஆவணம் பயன்படுத்தியதை மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரை தவறாக பயன்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.