கோகிமா: நாகாலாந்து மாநில ஆளுநராக இல.கணேசன்  இன்று பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக இருந்த நிலையில், அவரை நாகலாந்து ஆளுநராக மாற்றி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மணிப்பூரில் இருந்து நாகலாந்துக்F இடம் பெயர்ந்த இல.கணேசன் இன்று முற்பகல் நாகலாந்து மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.

நாகலாந்து, ராஜ்பவனில், முதல்வர் நெய்பியு ரியோ, துணை முதல்வர் ஒய் பாட்டன், சபாநாயகர் ஷரிங்கெய்ன் லாங்குமர், கேபினட் அமைச்சர்கள், காவல்துறை இயக்குநர் ஜெனரல் பானுவோ இசட் ஜமீர் ஆகியோர் முன்னிலையில் கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சோங்குப்சுங் செர்டோ அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.