சென்னை:
மிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதில் பெங்களூரில் வசிக்கும் மீனாட்சி சுந்தரத்திற்கு 2022-ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு முதன்மையானவர்களில் ஒருவர் ஆவார்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், இவர் பெருந்தலைவர் காமராசர் உடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராவார். விருது பெறும் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]