உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

Must read

சென்னை: 
ள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய  9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில்,  உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில்  அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்,  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article