கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி எளிய பூஜை முறை. விரதமிருந்து வழிபாட்டால் அற்புத பலனைப் பெற்றிடலாம்.
- அதிகாலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட வேண்டும்.
- இந்த தினத்தில் மூன்றே முக்கால் நாளிகையாவது அதாவது (ஒரு நாளிகை 24 நிமிடம்) ஒன்னரை மணி நேரமாவது விரதம் இருப்பது நல்லது.
- இதனால் நாம் மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கி, நல்லருள் சேரும். குடும்பத்தில் குறையாத செல்வங்கள் பெற்றிடலாம்.
- விரத தினத்தின் போது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடியாதவர்கள் அரிசியால் செய்ததைத் தவிர பழங்கள், பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம்.
- கிருஷ்ணர் பிறந்த போது மூன்று நபர்கள் மட்டும் விழித்திருந்ததாகக் கூறப்படுகிறது. வசுதேவர்- தேவகி மற்றும் சந்திர பகவான். இதனால் கிருஷ்ண ஜெய்ந்தி வழிபாடு, பூஜை சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு மாலை நேரத்தில் செய்வது சிறந்தது.
- கிருஷ்ண ஜென்மாஷ்டமி விரதம், வழிபாடு செய்யும் போது கிருஷ்ணரின் விக்ரகத்தை, குழந்தை வரம் வேண்டும் பெண், தன்னுடைய மடியில் வைத்து தாலாட்டு பாடலாம். அவருக்கு வெண்ணெய், பலகாரம் கொடுப்பது போல செய்யலாம்.
பூஜை முடிந்த பின்னர் கிருஷ்ணருக்கு முன் வைத்திருந்த கலசத்தை வலது புறமாக நகற்றி வைத்து, கிருஷ்ணருக்கு படைத்த நைவேத்திய பலகாரங்களை, பூஜைக்கு வந்திருப்பவர்களுக்கும், அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பின்னர் நீங்களும் எடுத்து சுவைக்கலாம். கிருஷ்ண பூஜை முடிந்த பின்னர் சந்திரனை பார்த்து வழிபாடு செய்யவும்.