மேஷம்

கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் வரும். அந்தக் காதல் கைகூடவும் செய்யும். குறிப்பிட்ட ஒரு முயற்சியின் காரணமாகப் பணவரவு இருந்தாலும் வருமானத்தைச் சேமிக்க முடியாமல் வீண்செலவு செய்ய வேண்டி இருக்கும். புதிய முயற்சிகளையும் தொலை தூர பிரயாணங்களையும் இந்த வாரம் தவிர்க்கவும். சிலருக்கு இதுவரை வராமல் இழுத்தடித்த பணம் வந்து சேரும். தந்தை வழி உறவினர்களிடம் பிரச்னைகள் வரலாம். சிலருக்கு பெண்களால் லாபம் உண்டு. அந்தஸ்து, கௌரவம் பழுதுபடாது. எண்ணங்கள் செயலாகி நினைத்தது நடக்கும். சொன்னது பலிக்கும். உங்களில் சிலருக்கு உயரமான இடங்களுக்கு போகும் அமைப்பு உண்டாகும். மலையும் மலைசார்ந்த இடங்களில் சுரங்கம் கிரஷர் ஜல்லி கிரானைட் போன்ற தொழில் வைத்திருப்பவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் நன்மைகளைத் தரும் விஷயங்கள் நடக்கும்.

ரிஷபம்

இந்த வாரம் கிரகங்கள் நன்மை செய்யும் அமைப்பில் உள்ளன.  இந்த சாதகமான நேரத்தில் எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடலையும் அதற்கான அடிப்படைகளையும் அமைத்துக் கொள்ளுவது நல்லது. சுமைகள் எதையும் கொடுக்காத வாரம் இது. கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் இருந்துச்சு. முயற்சி செய்தும் காரியம் கைகூடாமல் டென்ஷன் ஆனீங்க.  ஸம் டைம்ஸ் அதிர்ஷ்டம் இல்லை என்று மனசுக்குள் புலம்பினீங்கதானே? டோன்ட் ஒர்ரி. இனி அதெல்லாம்  இல்லை. செம்ம ஜாலியான வாரம் இது. ரிலேடிவ்ஸ் கூட ஹாப்பியா இருப்பீங்க. பிரதர்ஸ் சிஸ்டர்ஸ்க்கு உங்களால் நல்ல விஷயங்கள் நடக்கும். அவங்க மனசு உங்களை வாழ்த்தும். குழந்தைங்க வாழ்க்கையில் நீங்க ஆசையா எதிர்பார்த்துக்கிட்டிருந்த விஷயங்கள் நடக்கும். மனைவிக்கு / கணவருக்கு லாபங்களும் நன்மைகளும்  ஹாப்பி நியூஸும் வரும்.

மிதுனம்

எந்தக் காரியமும் தடைபடாமல் நிறைவேறும் வாரம் இது. வார பிற்பகுதியில் அதிக  நல்லபலன்கள் கிடைக்கும். சிலருக்கு தொழில் அல்லது உத்யோகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பணவரவிற்கு குறை இருக்காது. எதையும்  சமாளித்து விடுவீங்க அனைத்திலும் எதிர்பாராத வெற்றியும், சிலருக்கு மறைமுக தன லாபமும் உண்டு.  சொந்த ஊரிலிருந்து தள்ளி இருப்பவர்கள் நன்மைகளை அடையப் பெறுவீங்க. வேலைக்காக வெளியூர் போறவங்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. எதிரிகள் நேரம் பார்த்துக்கிட்டிருக்காங்க… பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருங்க. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு சந்தோஷ நிகழ்ச்சிகள் உண்டு. மனதில் உற்சாகமும் செல்களில் வேகமும் சூப்பரா இருக்குங்க. பாட்டுப் பாடி விஸிலடிக்கும் மனநிலையில்  இருப்பீங்க. முயற்சிகள் வின் பண்ணி, பாராட்டுகள் வாங்கித் தரும்.

கடகம்

வருமானம் கிடைக்கும் வாரம் இது. உங்களில் சிலருக்கு எடுக்கும் முயற்சிகளில் ஒன்று சுலபமாக முடிந்து நன்மையும், லாபமும் உண்டு. வெளிநாட்டு வேலைக்காக விசா எதிர்பார்த்து காத்திருந்தவங்களுக்கு இந்த வாரம் நல்லவை நடக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவாங்க. வெளிநாட்டு குடியுரிமை பற்றிய நல்ல தகவல் வரும். கலைஞர்களுக்கு இது நல்லவாரம். பெண்களுக்கு அலுவலகங்களில் இருந்து வந்த தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. எதிர்காலத்தில் நீங்க நன்றாக இருக்கப் போவதற்கான முயற்சிகளை இப்போதே துவங்குவீங்க. தொட்டது துலங்கும். கேட்டது கெடைக்கும். நெனைச்சது நடக்கும். தன்னம்பிக்கை ஜம்மென்று உயரும். மனசில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் இன்கிரீஸ் ஆகும். உங்களுக்கோ பிறருக்கோ கல்விக்குப் பயன்படும் விஷயங்களுக்காகச் செலவு செய்வீங்க.

சிம்மம்

வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வந்த வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும், கசப்பான அனுபவங்களும் இனிமேல் தீரும். பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைவாக முடியும். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள்  இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. தந்தைவழியில் ஆதரவு உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லைகள் தீரும். மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் போன்றவர்கள் எதையும் நிதானமுடன் அணுக வேண்டும். நட்புக் கிரகங்கள் வலுவுடன் இருப்பதால் எது வந்தாலும் சமாளிப்பீங்க. யாராவது நண்பர்கள் உங்களோட ஆரோக்யத்தைக் கெடுக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்த நெனைச்சாங்கன்னா அவங்களை கட் செய்து விலக்கிடுங்க. சாப்பிடும் விஷயங்களில் கேர்ஃபுல்லா இருங்க. ஜீரண பிரச்னை வராம பார்த்துக்குங்கப்பா.

கன்னி

இந்த வாரம் நீங்க மனமுவந்து சொல்லும் வார்த்தைகள் பலிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீங்க.  சிலர் எதையும் பேசி ஜெயிப்பீங்க. சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வாங்க. வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் இருக்கும். வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தொழில் விரிவாக்கத்தினை நல்லமுறையில் செய்யலாம். பெண்களுக்கு இது நல்ல வாரம்தான். பிள்ளைகளால் பெருமைப்படுவீங்க. வேலை செய்யும்  இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சைக் குடும்பத்தினர் கேட்பார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீங்க.  பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு. குறிப்பாக இந்த ராசிப் பெண்களுக்கு யோக வாரம் இது.

துலாம்

எல்லா விஷயங்களும் கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும் இறுதியில் நன்மையாகவே முடியும்.  உங்களில் வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயதை தாண்டியவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் முன்பைவிட ஆரோக்யம் மேம்படக் காண்பீங்க. முக்கியமாக கண்சோதனை செய்து கொள்ளுங்கள். உடல்நலத்திலும், உயரமான இடங்களுக்கு செல்லும் போதும் கவனம் தேவை. லோன்களை நல்ல முறையில் முடிப்பீங்க.தனியார்துறை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படும். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, வாய்ப்புள்ளது. தேவையேயில்லாத வீண் கற்பனைக் கவலைகள் வேணாங்க.

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 21 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனமாயிருங்கள்.

விருச்சிகம்

சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவை மட்டும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான வாரம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைப்படாது. பணவரவுக்கு தடை இல்லை. பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும்.  தொழில் முட்டுக்கட்டைகள் விலகும். வேலையில் நிம்மதி கிடைக்கும்.  வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் உண்டு. பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற யூக வணிக தொழிலில் உள்ளவர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் உண்டு. போட்டி, பந்தயங்கள் வெற்றியை தரும். நீண்ட நாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ இந்த வாரம் சந்தித்து மகிழ்ச்சி அடைவீங்க. தடைகள் மற்றும்  தாமதங்கள் நீங்கும்.

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24 வரை /சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனமாயிருங்கள்.

தனுசு

இந்த வாரம் உங்க ராசிக்கு இனிமையாகவே அமையும். சென்ற சில வாரங்களாக உங்களுக்கு எந்த விஷயங்களில் பிரச்னைகள் இருந்து வந்ததோ அவை அனைத்தும் உங்கள் மனம் போலவே தீர்ந்து நன்மைகள் நடக்கும். சிலருக்கு ஆலயப் பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில் புரிபவர்கள் மேன்மை அடைவீங்க. பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் கிடைக்கும் வாரம்  இது. பணியிடத்தில் நல்ல திருப்பங்கள் உண்டு. உங்களில் சிலருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீங்க. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளி வெற்றியைத் தரும் வேலைகளை முனைப்புடன் செய்ய வேண்டிய வாரம் இது. இதுவரை சில விஷயங்களில் சோம்பலாக இருந்தவர்கள் அதை விடுத்து சுறுசுறுப்பாக மாறுவீங்க. சிலருக்கு புதிய வாகன யோகம் உண்டு. இன்னும் சிலருக்கு சொந்த வீடு பாக்கியம் இப்போது கிடைக்கும். மேன்மைகள் கிடைக்கும் வாரம் இது.

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 26 வரை / சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனமாயிருங்கள்.

மகரம்

உங்கள் ராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா, டிவி போன்ற துறைகளில் இருப்போர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவாங்க. இந்த சாதகமான நேரத்தை எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு மாற முடியும். சிக்கலில் இருந்த தொழில் வியாபாரம் போன்றவை மறுபடியும் எழுச்சியுடன் நடைபெறப்போகும் காலம் வந்து விட்டது. பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகள் நடக்க சான்ஸ் இருக்குங்க. சிலர் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி செலவு செய்ய வேண்டி இருக்கும். நியாயமான தைரியம் பெற்று, வீறு கொண்டு எழும் வாரம் இது.

கும்பம்

இந்த ராசிக்காரர்களுக்கு சோதனைகள் முடிந்து விட்டது. இனிமேல் உங்களுக்குத் தொந்தரவுகள் இருக்காது. உங்கள் பிரச்னைகள் அத்தனையும் தீர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேல் நன்றாக இருப்பீங்க. உங்களில் பெரும்பாலானோர் ஒளி பிறப்பதை உணர ஆரம்பிப்பீங்க இன்னும் வழி காணாத மிகச் சிலருக்கும் வரும் வாரங்களில் துன்ப மேகங்கள் விலகும். இதுவரை இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று தயங்கிக் கொண்டிருந்தவர்கள்  துணிச்சலுடன் செயலாற்றுவீங்க. கிரகநிலைகள் சாதகமாக திரும்புவதால் உங்களுடைய மனதைரியமும், செயல் திறனும் கூடுதலாகும். அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் இந்த வாரத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்வீங்க. எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை. உங்களில் வயதானவர்களுக்கு மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும்.

மீனம்

என்னதான் சோதனைகள் இருந்தாலும் ஓரளவிற்கு பணப்புழக்கம் கையில் இருக்கும். வருமானம் வருவதால் கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். உங்களில் சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க வாய்ப்புகள் வரும்.  இந்த வாரம் சோதனைகள் எதுவும் இல்லை. கலைத்துறையினருக்கு இது சிறப்பான வாரம். சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். பெண்கள் உதவுவாங்க. சங்கடங்கள் இருந்தாலும் முடிவில் அனைத்தும் சாதகமாகவே முடியும். வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால் கும்பத்தினர் இப்போது எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள், லாட்டரிச்சீட்டு, ரேஸ் போன்றவை இப்போது கை கொடுக்காது. எதிலும் பேராசைப்படாமல்  இருப்பது நல்லது.