சென்னை: விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் தடுப்பணை கட்டப்பட் ஒரே ஆண்டில் 2வது முறையாக உடைந்ததால் அந்த பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தடுப்பணையை கட்டிய நிறுவனம்,  சென்னையில் தரமற்ற முறையில் கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டிய பி.எஸ்.டி நிறுவனம்தான் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் பெரும்பாலான அரசின் டெண்டர்களை எடுத்து அடுக்குமாடி குடியிருப்புகள், அணைகள் என பல கட்டிடங்களை நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டபிஎஸ்டி நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இந்த நிறுவனம் கட்டிய கட்டிங்கள் தரமற்றவை என குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே சென்னை புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்கு மாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட விரிசல் மற்றும் உடைந்துசிதறிய சில பகுதிகள்காணப்பட்டன. இது பெரும் பிரச்சினையான நிலையில், தற்போது  விழுப்புரம் அருகே தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூர் பகுதியில் அந்நிறுவனம் கட்டிய தடுப்பணை  மீண்டும் உடைந்துள்ளது. இந்த தடுப்பணை ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை வெள்ளம் காரணமாக, உடைந்த நிலையில், மீண்டும் கட்டப்பட்டது. ஆனால், தற்போது பெய்து வரும் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மீண்டம் ஒராண்டுக்குள் 2-வது முறையாக உடைந்துள்ளது.

கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் 25 கோடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடுப்பு அணை கட்டப் பட்டது தளவானூர் தடுப்பணை கட்டிய மூன்று மாதத்தில் அணையின் மதகு உடைந்து சேதமடைந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணை உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறி வருகிறது

இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்த நிலையில் தற்போது இந்த அணை உடைந்து உள்ளதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிஎஸ்டி நிறுவனம் கட்டிய கட்டிடங்கள் அடுத்தடுத்து உடைந்து விழுந்து வருகிறது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை யடுத்து, கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பிஎஸ்டி நிறுவனம் கட்டிய அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என திமுக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே வேளையில் கே.பி.பார்க்கில் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டிய பிஎஸ்டி நிறுவனம் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து அறப்போர் இயக்க  ஜெயராம் வெங்கடேசன், “இன்று வரை கே பி பார்க் கட்டுமானத்தில் ஊழல் செய்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. 2007-ல் கே பி பார்க் கட்டுமானத்திற்கான டெண்டர் விடப்பட்டது. அதன்மூலம் 27 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனம் கட்டிய கட்டிமும் தரமற்றதாக உள்ளது.  இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் CUBE நிறுவனத்தின் முழு ஆய்வு அறிக்கையுடன் புகார் அளித்துள்ளோம். ஆனால், தற்போதைய தமிழகஅரசு, பி எஸ் டி நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.