ஜல்லிகட்டு இல்ல – இது டெல்லிக் கட்டு வைரலாகும் கோவனின் புதிய பாடல் ( வீடியோ)

Must read

 

 

“மூடு டாஸ்மாக்க மாடு” என்ற பாடலைப் பாடியதற்காக, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர், இடதுசாரி பாடகர் கோவன்.  தற்போது இவர் ஜல்லிக்கட்டு பற்றி பாடிய பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அந்த பாடல் வரிகள்…

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு – மாட்டை

அடக்கி விட்டோம் அன்று தொட்டு – இனி

வாடிவாசல் விட்டு விட்டு

மோடி அரசை அடக்கி காட்டு

 

காவிரியைத் தடுத்து எங்கள்

கழனியைக் கருக்கி, உழவன்

உயிர்களைக் குடித்து மண்ணைக்

கெடுத்தவனை எதிர்த்து மோது

 

தமிழினை அழித்து – செத்த

சமஸ்கிருதம் திணித்து – எங்கள்

பாடத்தை திரித்த – மோடி

வேடத்தை கலைக்கிறோம் பார்

 

பொங்கலுக்கு விடுமுறை ரத்து – நம்மை

சீண்டிப் பார்க்குது டெல்லிக்காத்து

வீரம் எங்கே, இங்கே காட்டு – காவிக்

காளையின் கொம்பை முறித்து வீழ்த்து.

 

வீடியோ:

 

More articles

Latest article