1000 ஆண்டுகள் பழமையான குவிமாடம் இல்லாத மசூதி

கேரளாவில் உள்ள கோட்டயம் நகரில் உள்ள தாழத்தங்கடியில் மீனாச்சில் நதிக்கரையில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமையான தாஜ் ஜுமா மஸ்ஜித்( மசூதி).”
மாலிக் தீனார்  (Malik Ibn Deenar) என்பவர் முதன் முதலில் கேரளாவில் இருந்து தான் இந்தியப் பகுதியில் இஸ்லாம் மார்க்கத்தை அறிமுகப்படுத்தினார் என்றும், இவரது தலைமையிலான குழு ஒன்று தான்  கேரளா மற்றும் மற்றும் கர்நாடகப் பகுதியில் பல மசூதிகளைக் கட்டியதாகவும் , அத்தகைய மசூதிகளில் இதுவும் ஒன்றெனக் கருதப் படுகின்றது. எனவே இதனை கேரள அரசு பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
இது கேரளாவின் கலாச்சார மையங்களில் ஒன்று. ஒரு அரசரின் அரன்மனைப்போன்று சிறப்பான வடிவமைப்பைக் கொண்ட இந்த மசூதியில், மரவேலைப்பாட்டினால் ஆன கண்கவர் கூரை, பாரம்பரிய குளிக்கும் இடம், சதுர வடிவிலான பொதுவெளி மற்றும் பின்னல்வகை ஜன்னல்களை உடையது.
1000 ஆண்டு பழமை வாய்ந்ததும் கட்டிட மற்றும் மர வேலைபாடுகளுக்காக புகழ் பெற்ற இந்த மசூதியின் கதவுகள் முதன்முறையாக பெண்களுக்காக கடந்த ஏப்ரல் 24_ம் தேதி திறந்துவிடப்பட்டன . மேலும் வருகின்ற மே 08_ம் தேதியும் திறந்துவிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ” இந்த அனுமதி சுற்றிப்பார்க்க மட்டுமே, பிரார்த்தனை செய்வதற்கு அல்ல” என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

கேரளாவின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெண்கள், சுற்றுலாப்பயணிகள் மசூதியின் கட்டிடவேலைப்பாட்டை பார்வையிட்டனர்.
வழிப்பாட்டுத் தளங்களில் பெண்களை அனுமதிக்கக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைப்பெறும் வேலையில், மசூதியின் இந்த முடிவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.