பெண்கள் பிச்சை எடுப்பதற்கு பதிலாக நடனமாடுவதில் தவறில்லை: சுப்ரீம் கேர்ட்

Must read

1
 
மகாராஷ்ட்டிராவில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் ரில் ஆடும் டான்சர்களாக பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கிறது என்று கூறி இந்த டான்ஸர்களுக்கு எதிராக மும்பை போலீசாரும் அரசும் தடைவிதித்தனர்.
இன்று  இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தபோது, , டான்ஸ் பார்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்தது. அதை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் ஏன் இத்தனை பிடிவாதம்ம்? டான்ஸ் பார்களில் நடனமாடி பெண்கள் சம்பாதிப்பது அரசியலமைப்பு உரிமைதான்.. அதிலும் தெருக்களில் இறங்கி பிச்சை எடுப்பதையும், தவறான தொழிலில் ஈடுபடுவதையும் விட நடனமாடி சம்பாதிப்பது மேலானது. ஆகவே மகராஷ்டிரா அரசு நடன பார்களுக்கு விதித்த தடையை நீக்கி, அவை இயங்க அனுமதிக்க வேண்டும். அதே நேரம்  கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு ஒரு கி.மீ., சுற்றளவில் டான்ஸ் பார்கள் இருக்கக்கூடாது” என்று உததரவிட்டனர்.
 

More articles

Latest article