நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள்.

அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படம் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

MOLODIST KYIV சர்வதேச திரைப்பட விழா மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் திரைப்பட விழாவில் உலகின் பல மொழிகளில் இருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வாகியுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் பெருமையை சர்வதேச அரங்கில் உரக்கச் சொல்லும் வகையில் கூழாங்கல் திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள கூழாங்கல் திரைப்படம் விரைவில் OTT தளங்களில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.